/
உள்ளூர் செய்திகள்
/
தூத்துக்குடி
/
திருச்செந்துார் கடற்கரையில் தங்க தடை
/
திருச்செந்துார் கடற்கரையில் தங்க தடை
ADDED : டிச 15, 2024 09:57 AM
துாத்துக்குடி : துாத்துக்குடி மாவட்டத்தில் தொடர் கன மழையின் காரணமாக மாவட்டத்தின் பல இடங்களில் சாலைகளில் வெள்ள நீர் செல்வதால் மாற்று பாதையில் வாகனங்கள் இயக்கப்பட்டு வருகிறது.
மழை மற்றும் வெள்ள சூழ்நிலையை கருதி, திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு வெளியூரில் இருந்து மக்கள் வருவதை தவிர்க்குமாறு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், இன்று பவுர்ணமி நாளில் மணிக்கு 55 கி.மீ., வேகத்தில் பலத்த காற்றும், வினாடிக்கு 0.9 மீ. முதல் 1.1 மீ வரை கடல் நீரோட்டமும் ஏற்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
எனவே, திருச்செந்துார் கோவில் கடற்கரையில் குளிக்கவும், இரவு முழுவதும் கடற்கரையில் தங்கவும் யாருக்கும் அனுமதி இல்லை.
இந்த உத்தரவை, கலெக்டர் இளம்பவத் பிறப்பித்துள்ளார்.