தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தூத்துக்குடி/ மாப்பிள்ளை தற்கொலை

மாப்பிள்ளை தற்கொலை

மாப்பிள்ளை தற்கொலை


ADDED : பிப் 02, 2025 02:41 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 02, 2025 02:41 AM


Follow on Google
அ நிறம் | அளவு

துாத்துக்குடி:துாத்துக்குடி மாவட்டம், தருவைகுளம் அருகே ஆனந்த மாடன் பச்சேரி கிராமத்தை சேர்ந்தவர் மெய்யப்ப போஸ், 25; தனியார் ஊழியர். இவருக்கும், அவரது அக்கா மகள் ஒருவருக்கும் பிப்., 3ல் திருமணம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

இந்நிலையில், இரவு பணிக்கு சென்றுவிட்டு நேற்று காலை திரும்பிய மெய்யப்ப போஸ், அப்பகுதியில் புதிதாக கட்டியுள்ள வீட்டிற்கு சென்றார்.

காலை உணவு சாப்பிடுவதற்காக அவரை பாட்டி பேச்சியம்மாள் அழைக்க சென்றபோது அங்குள்ள ஒரு பகுதியில் துாக்கிட்டுள்ளார்.

உறவினர்கள் அவரை மீட்டு துாத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பரிசோதித்த டாக்டர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். தற்கொலைக்கான காரணம் குறித்து தருவைகுளம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us