ADDED : பிப் 06, 2024 03:19 AM

அ நிறம் | அளவு
தூத்துக்குடி: துாத்துக்குடி அருகே மறவன்மடத்தைச் சேர்ந்த அகஸ்டின் மகன் ஜான்சன் 58. இவர் ஓட்டப்பிடாரம் அருகே கோவிந்தாபுரம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.
ஐந்தாம் வகுப்பு வரை உள்ள இப்பள்ளியில் 8 மாணவ, மாணவியர் மட்டுமே பயில்கின்றனர். அங்கு 4ம் வகுப்பு பயிலும் சிறுமிகளிடம் தன் அலைபேசியிலுள்ள ஆபாச வீடியோக்களை காட்டி பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதுகுறித்து சிறுமிகள் பெற்றோரிடம் தெரிவித்தனர். பெற்றோர் புகாரின் பேரில் கடம்பூர் அனைத்து மகளிர் போலீசார் விசாரித்து ஜான்சனை போக்சோ வழக்கில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
