/
உள்ளூர் செய்திகள்
/
தூத்துக்குடி
/
காயல்பட்டினத்தில் ஹிந்து மயானம் இடிப்பு
/
காயல்பட்டினத்தில் ஹிந்து மயானம் இடிப்பு
ADDED : டிச 03, 2024 04:29 AM

துாத்துக்குடி : துாத்துக்குடி மாவட்டம், காயல்பட்டினம் நகராட்சி பகுதியில் ஹிந்து மக்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் அனைத்து சமுதாய மக்களுக்கும் பொதுவான மயானம் உள்ளது. 300 ஆண்டுகளுக்கும் மேலாக அந்த மயானத்தில், பல சமுதாய மக்கள் இறந்தவர்களின் ஈமகிரியை செய்து வருகின்றனர்.
அடக்கம் செய்தவர்களுக்கு கல்லறைகள் கட்டி வழிபாடும் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், சில நாட்களுக்கு முன், இரவோடு இரவாக மயானத்தையும், அங்கிருந்த கல்லறைகளையும் காயல்பட்டினம் நகராட்சி ஊழியர்கள் இடித்து அகற்றினர்.
அந்த பகுதியில் நகராட்சி சார்பில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மயானம் இடிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து நுாற்றுக்கும் மேற்பட்டோர் கலெக்டர் அலுவலகத்தை நேற்று முற்றுகையிட்டனர்.
கலெக்டரிடம் அவர்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:
எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் மயானமும், கல்லறைகளும் இடிக்கப்பட்டுள்ளன. நகராட்சி கமிஷனர் உத்தரவில் கல்லறைகள் இடிக்கப்பட்டுள்ளன. கமிஷனர் மீது நடவடிக்கை எடுத்து, அப்பகுதியில் மீண்டும் மயானம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.