பெண் போலீசுக்கு ஆபாச மெசேஜ் அனுப்பிய இன்ஸ்., காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்
பெண் போலீசுக்கு ஆபாச மெசேஜ் அனுப்பிய இன்ஸ்., காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்
UPDATED : நவ 05, 2026 11:55 PM
ADDED : நவ 04, 2026 08:29 PM
துாத்துக்குடி:
பெண் போலீஸ் ஒருவருக்கு, 'வாட்ஸாப்'பில் ஆபாச மெசேஜ் அனுப்பியதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, இன்ஸ்பெக்டர் இன்னோஸ்குமார், 45, காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார்.
துாத்துக்குடி மாவட்டம், குலசேகரன்பட்டினம் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்தவர் இன்னோஸ்குமார். தசரா விழா பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த பெண் காவலர் ஒருவருக்கு வாட்ஸாப்பில் இன்னோஸ்குமார் தொடர்ந்து ஆபாச மெசேஜ்களை அனுப்பியுள்ளார்.
பாதிக்கப்பட்ட பெண் போலீஸ், இதுகுறித்து மாவட்ட எஸ்.பி., சிவபிரசாத் மற்றும் திருநெல்வேலி சரக டி.ஐ.ஜி., திருநாவுக்கரசு ஆகியோரிடம் புகார் அளித்தார். இதையடுத்து, இன்னோஸ்குமாரை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்து, டி.ஐ.ஜி., திருநாவுக்கரசு நேற்று உத்தரவிட்டார்.
பெண் போலீசுக்கு அனுப்பப்பட்டதாகக் கூறப்படும் வாட்ஸாப் மெசேஜ் விபரத்தின் உண்மைத்தன்மை குறித்து உரிய விசாரணை நடத்தப்பட்டு, அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என, காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
