ADDED : ஏப் 13, 2026 12:54 AM
அ நிறம் | அளவு
துாத்துக்குடி: துாத்துக்குடி சிப்காட் போலீஸ் ஸ்டேஷனில் ஏட்டாக பணிபுரிந்த கோபாலகிருஷ்ண ன், 39, என்பவர், 'போக்சோ' வழக்கில் கைதாகி, அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பெறுபவரின் பாது காப்புக்காக இருந்தார்.
அதே வார்டில் சிகிச்சை பெற்ற ஒரு தொழிலாளிக்கு உதவியாக, அவரது மனைவி இருந்துள்ளார். அந்த பெண்ணிடம் ஏட்டு கோபாலகிருஷ்ணன் அத்துமீறி பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்துள்ளார். அவர், குடிபோதையில் இருந்ததாகவும் கூறப்படுகிறது.
தென்பாகம் போலீசார், கோபாலகிருஷ்ணனை நேற்று கைது செய்தனர்.
