/
உள்ளூர் செய்திகள்
/
தூத்துக்குடி
/
பணி நியமன ஆணை வழங்கினார் கனிமொழி!
/
பணி நியமன ஆணை வழங்கினார் கனிமொழி!
ADDED : டிச 07, 2024 02:29 PM

திருச்செந்தூர்: திருச்செந்தூர் கோவில் யானை தாக்கி இறந்த யானைப் பாகன் உதயகுமார் மனைவிக்கு பணி நியமன ஆணையை தி.மு.க., எம்.பி., கனிமொழி வழங்கினார்.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் கடந்த நவம்பர் 18ம் தேதி தெய்வானை யானை தாக்கியதில் பாகன் உதயகுமாரும், அவரது உறவினரான சிசுபாலனும் உயிரிழந்தனர். இன்று (டிச.,07) திருச்செந்தூர் வ.உ.சி. தெருவில் உள்ள யானைப் பாகன் உதயகுமாரின் வீட்டிற்கு, தி.மு.க., எம்.பி., கனிமொழி நேரில் சென்றார்.
அவரது குடும்பத்தினருக்கு கனிமொழி ஆறுதல் கூறினார். உதயகுமாரின் மனைவிக்கு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்ற பணி நியமன ஆணையை கனிமொழி வழங்கினார்.
அப்போது, தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க., செயலாளரும், சமூக நலம் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதா ஜீவன், கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் இளம் பகவத், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, திருச்செந்தூர் திருக்கோவில் அறங்காவலர் குழு தலைவர் அருள்முருகன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.