/
உள்ளூர் செய்திகள்
/
தூத்துக்குடி
/
ரூ.52 லட்சம் மோசடி கேரள வாலிபர் கைது
/
ரூ.52 லட்சம் மோசடி கேரள வாலிபர் கைது
ADDED : டிச 07, 2024 03:50 AM

துாத்துக்குடி : துாத்துக்குடி கே.டி.சி., நகரைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவருக்கு, 'வாட்ஸாப்'பில் வந்த தகவலில், பங்கு சந்தை வர்த்தகத்தில் பணம் சம்பாதிக்கலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது. அதை நம்பி, தகவல் அனுப்பியவர்களை தொடர்பு கொண்ட அந்த தொழிலதிபர், 4.40 லட்சம் ரூபாய் லாபம் சம்பாதித்தார்.
தொடர்ந்து, அதிக லாபம் சம்பாதிக்கலாம் என அவர்கள் ஆசை வார்த்தை கூறி, www.irqql.com என்ற இணையதள இணைப்பை அனுப்பினர். அதில் வந்த செயலியை பதிவிறக்கம் செய்து, 52 லட்சம் ரூபாயை முதலீடு செய்தார்.
ஆனால், பணம் ஏதும் திரும்ப கிடைக்காததால், மோசடி செய்யப்பட்டதை அறிந்த தொழிலதிபர், 'சைபர் கிரைம்' போலீசாரிடம் புகார் அளித்தார். இன்ஸ்பெக்டர் சாந்தி தலைமையிலான தனிப்படை போலீசார், விசாரணை நடத்தினர். மோசடியில் ஈடுபட்டவர் கேரளா மாநிலம் மலப்புரம் பகுதியைச் சேர்ந்த அஜ்மல், 43, என தெரிந்தது.
இதையடுத்து, கேரளா சென்ற தனிப்படை போலீசார், அஜ்மலை நேற்று முன்தினம் கைது செய்து, துாத்துக்குடி அழைத்து வந்து விசாரித்தனர். பின், மாஜிஸ்திரேட் முன் அவரை ஆஜர்படுத்திய போலீசார், பேரூரணி சிறையில் அடைத்தனர்.