/
உள்ளூர் செய்திகள்
/
தூத்துக்குடி
/
பீடி தர மறுத்த நண்பரை கொலை செய்தவருக்கு 'ஆயுள்'
/
பீடி தர மறுத்த நண்பரை கொலை செய்தவருக்கு 'ஆயுள்'
ADDED : செப் 22, 2024 03:34 AM
துாத்துக்குடி:துாத்துக்குடி மாவட்டம் பசும்பொன் நகரைச் சேர்ந்தவர் மாரியப்பன், 51; நில புரோக்கர். இவரும் துாத்துக்குடி தெர்மல் நகர் ஊரணி ஒத்த வீட்டைச் சேர்ந்த லாரி டிரைவர் மாரீஸ்வரன், 41, என்பவரும் நண்பர்கள்.
கடந்த 2020ம் ஆண்டு இரவு முடுக்குக்காடு எதிரே வல்கனைசிங் வேனை மாரீஸ்வரன் நிறுத்தி இருந்தார். அங்கு மாரியப்பன் சென்றார். இருவரும் அதே வேனில் அமர்ந்து பேசிக்கொண்டு இருந்தனர்.
அப்போது மாரீஸ்வரன், மாரியப்பனிடம் பீடி கேட்டபோது மாரியப்பன் தர மறுத்தார். இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த மாரீஸ்வரன், நண்பர் மாரியப்பனின் கழுத்தை நெரித்து வேனில் இருந்த இரும்புக் கம்பி, பஞ்சர் பார்க்கும் உபகரணங்களால் சரமாரியாக தாக்கி கொலை செய்தார்.
முத்தையாபுரம் போலீசார் மாரீஸ்வரனை கைது செய்தனர். வழக்கை விசாரித்த துாத்துக்குடி இரண்டாவது கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி உதயவேலவன், குற்றவாளி மாரீஸ்வரனுக்கு ஆயுள் தண்டனை மற்றும் 5,000 ரூபாய் அபராதம் விதித்தார்.