/
உள்ளூர் செய்திகள்
/
தூத்துக்குடி
/
லாட்ஜ் உரிமையாளருக்கு சரமாரி அரிவாள் வெட்டு
/
லாட்ஜ் உரிமையாளருக்கு சரமாரி அரிவாள் வெட்டு
ADDED : ஆக 11, 2025 02:37 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
துாத்துக்குடி:துாத்துக்குடி, போல்பேட்டையைச் சேர்ந்த முருகானந்தம், 53, என்பவருக்கு சொந்தமான விடுதி, எட்டையபுரம் சாலையில் உள்ளது. முருகானந்தம் நேற்று மாலை விடுதியில் இருந்தபோது, இரு வாலிபர்கள் அவரிடம் தகராறு செய்து அரிவாளால் வெட்டினர்.
அவர் கூச்சலிட்டதும், விடுதியில் துப்புரவு பணியில் ஈடுபட்டிருந்த பார்வதி, 49, என்ற பெண் அந்த வாலிபர்களை தடுக்க முயன்றார். அவரையும் அரிவாளால் தாக்கிவிட்டு இரு வாலிபர்களும் அங்கிருந்து தப்பினர். அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள், இருவரையும் மீட்டு துாத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். துாத்துக்குடி வடபாகம் போலீசார் இருவரை பிடித்து விசாரிக்கின்றனர்.