ADDED : ஏப் 22, 2026 11:52 PM

அ நிறம் | அளவு
துாத்துக்குடி: கோவையில் இருந்து பயணியரை ஏற்றி கொண்டு, ஸ்ரீ சர்வன் என்ற தனியார் ஆம்னி பஸ் நாகர்கோவில் நோக்கி சென்றது. உடு மலைபேட்டையை சேர்ந்த சரவணன், 37, என்பவர் பஸ்சை ஓட்டினார்.
மதுரை -- கன்னியா குமரி தேசிய நெடுஞ்சாலையில், துாத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி, மூப்பன்பட்டி விலக்கு பகுதியில், பிரேக் பழுதால் சாலையில் நின்ற சிமென்ட் கலவை டேங்கர் லாரி மீது மோதியது.
இதில், ஒரு குழந்தை உட்பட, 20 பேர் காயமடைந்தனர். இடிபாடுகளுக்குள் சிக்கிய டிரைவர் சரவணன், வெளி வர முடியாமல் தவித்தார். தீயணைப்புத் துறையினர் அவரை மீட்டனர்.
கல்லிடைக்குறிச்சியை சேர்ந்த லாரி டிரைவர் இசக்கியை 43, கோவில்பட்டி போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.
