ADDED : மே 06, 2026 11:41 PM

துாத்துக்குடி: வீட்டில் தனியாக இருந்த 10ம் வகுப்பு மாணவியை கத்தியை காட்டி மிரட்டி, பாலியல் தொல்லை கொடுத்த வாலிபரை போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.
துாத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் தாலுகா, ஆற்றங்கரை கிராமத்தை சேர்ந்தவர் கார்த்திக்குமார், 23. இவர், சில நாட்களுக்கு முன், கம்பத்துப்பட்டி கிராமத்திற்கு சென்றார்.
அங்கு, கோடை விடுமுறைக்காக பாட்டி வீட்டிற்கு வந்து, தனியாக இருந்த, 10ம் வகுப்பு மாணவியிடம் கத்தியை காட்டி மிரட்டிய கார்த்திக்குமார், மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தார்.
மாணவி கூச்சலிட்டதால், அங்கிருந்து அவர் தப்பி ஓடி விட்டார். பாதிக்கப்பட்ட மாணவி தரப்பில், அவரது தாய் விளாத்திகுளம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
வழக்கு பதிவு செய்த போலீசார், கார்த்திக்குமாரை நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர்.
