/
உள்ளூர் செய்திகள்
/
தூத்துக்குடி
/
தலையில் கல்லை போட்டு நண்பனை கொன்றவர் கைது
/
தலையில் கல்லை போட்டு நண்பனை கொன்றவர் கைது
ADDED : நவ 05, 2025 03:04 AM
காயல்பட்டினம்: தர்காவில் துாங்கியவர் தலையில் கல்லை போட்டு கொன்ற நபரை போலீசார் கைது செய்தனர்.
துாத்துக்குடி மாவட்டம், காயல்பட்டினம் அலியார் தெருவைச் சேர்ந்தவர் சாகுல் அமீது, 53. ஆறுமுகனேரியைச் சேர்ந்தவர் முகமது அசன், 49. நண்பர்களான இருவரும் பெயின்டர் வேலை செய்து வந்தனர்.
இருவரும் நேற்று முன்தினம், குலசேகரன் பட்டினம், காவடிப்பிறை தெருவில் உள்ள மசூதிக்கு சென்று, ஒன்றாக மது குடித்துள்ளனர். இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், சிறிது நேரத்தில் துாங்க சென்றுள்ளனர்.
நள்ளிரவு சாகுல் அமீது துாங்கிக் கொண்டிருந்தபோது, அவரது தலையில் ஹாலோபிளாக் கல்லை போட்டு, முகம்மது அசன் கொலை செய்தார். குலசேகரன்பட்டினம் போலீசார், முகமது அசனை நேற்று கைது செய்தனர்.

