/
உள்ளூர் செய்திகள்
/
தூத்துக்குடி
/
கீழக்கரையில் 22 பவுன் நகை திருடிய இளம் பெண் கைது
/
கீழக்கரையில் 22 பவுன் நகை திருடிய இளம் பெண் கைது
ADDED : நவ 05, 2025 02:31 AM

கீழக்கரை: ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் 22 பவுன் நகைகளை திருடிய வேலைக்கார பெண் கைது செய்யப்பட்டார்.
கீழக்கரை வடக்குத்தெருவைச் சேர்ந்தவர் கருணை முகமது. இவரது வீட்டில் மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த பர்வீன் பானு 25, வீட்டு வேலைகள் செய்து வந்தார். ஜூலையில் கருணை முகமது வீட்டில் பீரோவில் வைத்திருந்த 22 பவுன் நகைகள் மாயமாயின.
இதுகுறித்து கீழக்கரை போலீசில் கருணை முகமது புகார் அளித்தார். நான்கு மாதங்களாக தொடர்ந்து விசாரணை நடத்திய போலீசார் வீட்டு வேலை செய்த பர்வீன் பானுவிடம் விசாரித்தனர். முதலில் மறுத்த பர்வீன் பானு பின் நகைகளை திருடியதை ஒப்புக்கொண்டார். அவர் 20 பவுன் நகைகளை போலீசாரிடம் ஒப்படைத்தார். பர்வீன் பானுவை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். ஆதாரத்தை மறைக்க சிசிடிவி கேமராவை பர்வீன் பானு ஆப் செய்ததும் விசாரணையில் தெரிய வந்தது.

