/
உள்ளூர் செய்திகள்
/
தூத்துக்குடி
/
திருச்செந்துார் கோவிலில் மண்டல பூஜை இன்று நிறைவு
/
திருச்செந்துார் கோவிலில் மண்டல பூஜை இன்று நிறைவு
ADDED : ஆக 11, 2025 02:25 AM
திருச்செந்துார்:திருச்செந்துார் முருகன் கோவிலில் நடந்து வந்த மண்டல பூஜை இன்றுடன் நிறைவடைகிறது.
திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் , ஜூலை, 7ல் கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, 48 நாட்கள் மண்டல பூஜை நடத்தப்பட வேண்டும். ஆவணி திருவிழா நடக்க உள்ளதால், 30 நாட்கள் மட்டுமே மண்டல பூஜை நடைபெறும் என, கோவில் நிர்வாகம் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. இதன்படி மண்டல பூஜை இன்றுடன் நிறைவு பெறுகிறது.
தொடர்ந்து, ஆவணி திருவிழா, வரும், 14ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது. விடுமுறை தினம் என்பதால், நேற்று வழக்கத்தைவிட பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. பக்தர்கள் கடலில் நீராடிய பின், நாழிக்கிணற்றில் குளித்துவிட்டு, முருகனை குடும்பத்துடன் தரிசனம் செய்தனர்.
கோவில் வளாகம், கடற்கரை பகுதி, பஸ் நிலையம் என அனைத்து பகுதிகளிலும் பக்தர்களின் கூட்டம் அலைமோதியது. பாதுகாப்புக்காக, கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.