/
உள்ளூர் செய்திகள்
/
தூத்துக்குடி
/
ஆதிநாதர் ஆழ்வார் கோவிலில் மாசி திருவிழா தேரோட்டம்
/
ஆதிநாதர் ஆழ்வார் கோவிலில் மாசி திருவிழா தேரோட்டம்
ADDED : பிப் 18, 2025 09:43 PM

துாத்துக்குடி:துாத்துக்குடி மாவட்டத்தில் தாமிரபரணி ஆற்றின் கரையோரம் அமைந்துள்ள நவதிருப்பதி கோவில்களில் 9 வது கோவிலான ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோவிலில் மாசி திருவிழா கடந்த 9 ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. திருவிழா நாட்களில் தினமும் காலையும், மாலையும் சுவாமி நம்மாழ்வார் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளும் வீதி உலா நடந்தது.
ஒன்பதாம் திருவிழாவான தேரோட்டத்தை முன்னிட்டு நேற்று முன் தினம் அதிகாலையில் நடை திறக்கப்பட்டு காலை 5:00 மணிக்கு விஸ்வரூபம், 5:30 மணிக்கு திருமஞ்சனம், 6:00 மணிக்கு தீர்த்த விநியோகம், கோஷ்டி நடந்தது. காலை 7:45 மணிக்கு சுவாமி நம்மாழ்வார் திருத்தேரில் எழுந்தருளினார்.
தொடர்ந்து தீபாராதனைக்கு பிறகு பக்தர்கள் கோவிந்தா கோபாலா என்ற கோஷத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர். ரத வீதிகளை சுற்றி வந்து தேர் நிலையம் வந்தடைந்தது. பெருமாள் தெப்ப உற்சவம் கோலாகலமாக நேற்று நடந்தது.

