/
உள்ளூர் செய்திகள்
/
தூத்துக்குடி
/
பட்டா நிலத்தில் ரேஷன் கடை எம்.எல்.ஏ., முடிவுக்கு எதிர்ப்பு
/
பட்டா நிலத்தில் ரேஷன் கடை எம்.எல்.ஏ., முடிவுக்கு எதிர்ப்பு
பட்டா நிலத்தில் ரேஷன் கடை எம்.எல்.ஏ., முடிவுக்கு எதிர்ப்பு
பட்டா நிலத்தில் ரேஷன் கடை எம்.எல்.ஏ., முடிவுக்கு எதிர்ப்பு
ADDED : நவ 16, 2024 02:16 AM
துாத்துக்குடி:துாத்துக்குடி மாவட்டம், விளாத்திக்குளம் சட்டசபை தொகுதி புதுார் யூனியனுக்கு உட்பட்ட வெம்பூர் பகுதியைச் சேர்ந்தவர் ரவி. இவர், தி.மு.க., ஒன்றிய துணைச்செயலராக உள்ளார்.
இவரும், சகோதரர் திருமலை, சகோதரிகள் நால்வரும், தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
எங்கள் தந்தை சோலையப்பன் பெயரில் வெம்பூர் பகுதியில் உள்ள 49 சென்ட் நிலத்தை புறம்போக்கு என குறிப்பிட்டு, விளாத்திக்குளம் தி.மு.க., - எம்.எல்.ஏ., மார்க்கண்டேயனின் முயற்சியால், 2023ல் அங்கன்வாடி மையம் அமைக்கப்பட்டது.
அந்த இடத்தில் இப்போது ரேஷன் கடை கட்டுவதற்கு எம்.எல்.ஏ., மார்க்கண்டேயன் அடிக்கல் நாட்டியுள்ளார்.
தி.மு.க.,வில் உள்ள ரவியை கட்சியில் இருந்து நீக்கும் திட்டத்தோடு, மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ., செயல்படுகிறார். அவர் மீது நடவடிக்கை எடுத்து எங்களுடைய நிலத்தை காப்பாற்ற வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியுள்ளனர்.
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ.,வை கண்டித்து, 17ம் தேதி போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளதாக, இவர்கள் நேற்று பேட்டியளித்தனர்.

