/
உள்ளூர் செய்திகள்
/
தூத்துக்குடி
/
பிரசவித்த தாய் உயிரிழப்பு; மருத்துவமனை மீது புகார்
/
பிரசவித்த தாய் உயிரிழப்பு; மருத்துவமனை மீது புகார்
பிரசவித்த தாய் உயிரிழப்பு; மருத்துவமனை மீது புகார்
பிரசவித்த தாய் உயிரிழப்பு; மருத்துவமனை மீது புகார்
ADDED : ஏப் 20, 2025 11:56 PM
துாத்துக்குடி : பிரசவத்திற்காக அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பெண், குழந்தை பிறந்த சில மணி நேரத்தில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.
துாத்துக்குடி மாவட்டம், ஆறுமுகநேரியை சேர்ந்தவர் மஞ்சுளா, 23. இவருக்கு, கடந்த 17ம் தேதி பிரசவ வலி ஏற்பட்டதால், திருச்செந்துார் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
நேற்று முன்தினம் இரவு, 9:00 மணியளவில் அவருக்கு பெண் குழந்தை பிறந்த நிலையில், அதிகளவில் ரத்தப்போக்கு ஏற்பட்டது. டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். இருப்பினும், நள்ளிரவு, 12:30 மணிக்கு அவர் உயிரிழந்தார்.
குழந்தை பிறந்த சில மணி நேரத்தில் தாய் இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. திருச்செந்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.
டாக்டர்கள் முறையாக சிகிச்சை அளிக்காததால் மஞ்சுளா இறந்ததாக அவரது கணவர் டேனியல் ஜெபராஜ் மற்றும் உறவினர்கள் குற்றஞ்சாட்டினர். ஆர்.டி.ஓ., விசாரணையும் நடந்து வருகிறது. கடந்த 5ம் தேதி பெண் ஒருவருக்கு பிறந்த குழந்தை, சில மணி நேரத்தில் இறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
அதேபோல, தற்போது பெண் ஒருவர் இறந்ததால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர். அரசு மருத்துவமனையில் போதிய டாக்டர்கள் மற்றும் செவிலியர்கள் இல்லாததால் இறப்பு நடைபெறுவதாக சமூக ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

