/
உள்ளூர் செய்திகள்
/
தூத்துக்குடி
/
3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாயும் குடித்தார்
/
3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாயும் குடித்தார்
ADDED : மார் 17, 2025 02:04 AM
துாத்துக்குடி: துாத்துக்குடி, தாளமுத்துநகர் அருகே ஆரோக்கியபுரத்தைச் சேர்ந்த ஜஸ்டின் சீலன், 35. மனைவி சந்திர பிரியா, 31. தம்பதிக்கு ஸ்டெபி, 10, ஆரோக்கிய பிரின்ஸ், 8, ஜெசிக்கா, 1, என மூன்று குழந்தைகள் உள்ளனர்.
எலக்ட்ரீஷியன் வேலை செய்து வரும் ஜஸ்டின் சீலன் தினமும் மதுகுடித்து மனைவியிடம் தகராறு செய்துள்ளார்.
குடும்ப செலவுக்கு பணம் கொடுக்காமல் தினமும் கணவர் தாக்கி வந்ததால், விரத்தியடைந்த சந்திரபிரியா, மூன்று குழந்தைகளையும் தலைக்கு தேய்க்கும் சாயத்தை குடிக்கச் செய்து, அவரும் குடித்துள்ளார். சிறிது நேரத்தில் நான்கு பேரும் வீட்டில் மயங்கினர்.
அக்கம்பக்கத்தினர் அவர்களை துாத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். நான்கு பேருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தாளமுத்துநகர் போலீசார் விசாரிக்கின்றனர்.