தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தூத்துக்குடி/ குழந்தை கொலையில் திருப்பம் தாயின் கள்ளக்காதலன் கைது

 குழந்தை கொலையில் திருப்பம் தாயின் கள்ளக்காதலன் கைது

 குழந்தை கொலையில் திருப்பம் தாயின் கள்ளக்காதலன் கைது


ADDED : ஜன 22, 2026 04:44 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 22, 2026 04:44 AM


Follow on Google
அ நிறம் | அளவு

துாத்துக்குடி: நான்கு வயது பெண் குழந்தையை பாலியல் பலத்காரம் செய்து, கொலை செய்ததாக, தாயின் கள்ளக் காதலனை போலீசார் கைது செய்தனர்.

கன்னியாகுமரி மாவட்டம், இருளப்பபுரத்தைச் சேர்ந்தவர் சத்யா, 32. இரு திருமணம் செய்த இவர், கணவர்களை பிரிந்து, 4 வயது பெண் குழந்தை சந்தோஷியாவுடன் துாத்துக்குடி மாவட்டம், செட்டியாபத்தில் வசிக்கிறார்.

துாத்துக்குடி, ஆரோக்கியபுரத்தை சேர்ந்த இசக்கிராஜ், 21, என்பவருடன் சத்யா நெருங்கி பழகினார். நேற்று முன்தினம், இசக்கிராஜ் கண்காணிப்பில் சந்தோஷியாவை விட்டு, சத்யா கடைக்கு சென்று இருந்தார்.

அவர் திரும்பி வந்து பா ர்த்தபோது, குழந்தை மயங்கி கிடந்தது. விஷ வண்டு கடித்ததாக கூறி இருவரும் குழந்தையை உடன்குடி அரசு மருத்துவமனைக்கு துாக்கி சென்றனர். பரிசோதித்த டாக்டர்கள், குழந்தை இறந்து விட்டதாக கூறி, போலீசாருக்கும் தகவல் கொடுத்தனர்.

கு லசேகரன்பட்டினம் போலீசார் விசாரணையில், குழந்தை சந்தோஷியா கொலை செய்யப்பட்டது தெரிந்தது. சத்யாவிடமும், இசக்கிராஜிடமும் போலீசார் தனித்தனியே விசாரித்தனர்.

இ தற்கிடையே, பிரேத பரிசோதனையில், குழந்தை பாலியல் பலத்காரம் செய்யப்பட்டது உறுதி ஆனது. இதை தொடர்ந்து, போக்சோ சட்டத்தில், குலசேகரன்பட்டினம் போலீசார், இசக்கிராஜை கைது செய்து விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us