/
உள்ளூர் செய்திகள்
/
தூத்துக்குடி
/
ஆதார் கார்டு இல்லையா, சிறையில் அடைக்க முடியாது! உணவு இல்லாமல் தவித்த துாத்துக்குடி ஏட்டு
/
ஆதார் கார்டு இல்லையா, சிறையில் அடைக்க முடியாது! உணவு இல்லாமல் தவித்த துாத்துக்குடி ஏட்டு
ஆதார் கார்டு இல்லையா, சிறையில் அடைக்க முடியாது! உணவு இல்லாமல் தவித்த துாத்துக்குடி ஏட்டு
ஆதார் கார்டு இல்லையா, சிறையில் அடைக்க முடியாது! உணவு இல்லாமல் தவித்த துாத்துக்குடி ஏட்டு
ADDED : செப் 18, 2024 09:39 PM
துாத்துக்கு:துாத்துக்குடி தென்பாகம் காவல் நிலையத்தில் ஏட்டாக பணிபுரியும் புதியபிள்ளை என்பவர் சமீபத்தில் இரு கைதிகளை பேரூரணி சிறையில் அடைக்க அழைத்துச் சென்றார்.
அதில், ஒருவருக்கு ஆதார் கார்டு இல்லாததால் அந்த கைதியை சிறைக்குள் அனுமதிக்க முடியாது என கூறிய சிறை நிர்வாகம், ஸ்ரீவைகுண்டம் கிளை சிறைக்கு கொண்டு செல்லும்படி கடிதம் கொடுத்தது.
இதுதொடர்பாக ஏட்டு புதியபிள்ளை, 'வாட்ஸாப் ஆடியோ'வில் பேசியிருப்பதாவது:
இரவு, பகல் பாராமல் அலைந்து ஒரு வழக்கு தொடர்புடையவரை கைது செய்தோம். அவருக்கு ஆதார் கார்டு இல்லாததால், அந்த கைதியின் தாயிடம் கடிதம் பெற்றோம். தொடர்ந்து, அந்த நபருக்கு மருத்துவ பரிசோதனை நடத்தி, மாஜிஸ்திரேட் முன் ஆஜர்படுத்தி இரவு 8:00 மணிக்கு ரிமான்ட் பெற்று பேரூரணியில் உள்ள மாவட்ட சிறைக்கு கொண்டு சென்றோம்.
கைதானவருக்கு ஆதார் கார்டு இல்லாததால் அவரை சிறையில் அடைக்க முடியாது என சிறை நிர்வாகத்தினர் தெரிவித்துவிட்டனர். எடுத்துக் கூறியும் கேட்காத அவர்கள், கைதானவரை ஸ்ரீவைகுண்டம் கிளைச் சிறைக்கு அழைத்துச் செல்லுங்கள் என கடிதம் தந்தனர்.
அங்கிருந்து ஸ்ரீவைகுண்டம் சிறைக்கு அழைத்துச் சென்று இரவு 11:00 மணிக்கு பின், அந்த நபரை சிறையில் அடைத்தோம்.
சோறு, தண்ணீர் இல்லாமல் நாங்கள் பல மணி நேரம் தவித்தோம். மன உளைச்சலுக்கு ஆளாக வேண்டிய நிலை உள்ளது. ஒரு ஆதார் கார்டுக்காக போலீசாரை அலைக்கழிக்கும் நிலை உள்ளது. ஆதார் கார்டு இருந்தால் தான் சிறையில் அடைக்க முடியும் என்ற விவகாரத்தில் உயர் அதிகாரிகள் ஒரு முடிவு எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த ஆடியோவில் புதியபிள்ளை பேசியுள்ளார்.

