/
உள்ளூர் செய்திகள்
/
தூத்துக்குடி
/
'துாத்துக்குடியில் மழையால் பாதிப்பில்லை'
/
'துாத்துக்குடியில் மழையால் பாதிப்பில்லை'
ADDED : டிச 16, 2024 02:22 AM

துாத்துக்குடி: துாத்துக்குடியில் டிச., 11ம் தேதி இரவு முதல் தொடர்ந்து நான்கு நாட்கள் பெய்த கனமழை காரணமாக, மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
இந்நிலையில், மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை கனிமொழி எம்.பி., நேற்று நேரில் ஆய்வு செய்தார்.
அவர் அளித்த பேட்டி:
தாமிரபரணியில் அதிகம் தண்ணீர் வரக்கூடிய அபாயம் இருந்ததால் கரையோர பகுதிகளை சேர்ந்த மக்கள் அங்கிருந்து பாதுகாப்பாக அழைத்துச் செல்லப்பட்டு, நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். ஸ்ரீவைகுண்டம் அணையில் இருந்து வெளியே செல்லும் தண்ணீர் வினாடிக்கு 30,000 கனஅடியாக குறைந்து இருக்கிறது.
கோரம்பள்ளம் குளத்திற்கு தண்ணீர் அதிகமாக வரக்கூடிய நிலை ஏற்பட்டதும், பாதுகாப்பிற்காக அங்கிருந்து தண்ணீர் வெளியேற்றப்பட்டது.
கோரம்பள்ளம் குளம் பாதுகாக்கப்பட்டு, மக்கள் உடைமைகளும் பாதுகாக்கப்பட்டுள்ளன. மற்ற இடங்களில் மிகப்பெரிய பாதிப்புகள் இல்லை என சொல்லக்கூடிய அளவில் மழையை எதிர்கொண்டு இருக்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.

