/
உள்ளூர் செய்திகள்
/
தூத்துக்குடி
/
சி.பி.ஐ., அதிகாரிகள் எனக்கூறி மூதாட்டியிடம் பணம் மோசடி
/
சி.பி.ஐ., அதிகாரிகள் எனக்கூறி மூதாட்டியிடம் பணம் மோசடி
சி.பி.ஐ., அதிகாரிகள் எனக்கூறி மூதாட்டியிடம் பணம் மோசடி
சி.பி.ஐ., அதிகாரிகள் எனக்கூறி மூதாட்டியிடம் பணம் மோசடி
ADDED : ஜூலை 31, 2025 02:42 AM
துாத்துக்குடி:துாத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த மூதாட்டி ஒருவருக்கு, வாட்ஸாப் காலில் தொடர்பு கொண்ட நபர்கள், சி.பி.ஐ., அதிகாரிகள் எனக்கூறி, அறிமுகப்படுத்திக் கொண்டனர். மும்பையில் உள்ள ஒரு கடத்தல் வழக்கில், மூதாட்டிக்கு தொடர்பு இருப்பதாக கூறியவர்கள், வழக்கு பதிவு செய்யாமல் இருக்க, 50 லட்சம் ரூபாய் தருமாறு கேட்டுள்ளனர். அதிர்ச்சியடைந்த மூதாட்டி, அவர்கள் கூறிய வங்கி கணக்கிற்கு, 50 லட்சம் ரூபாயை அனுப்பி உள்ளார்.
மோசடி செய்யப்பட்டதை அறிந்த அவர், சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். விசாரணையில், மூதாட்டியை ஏமாற்றி பணம் பறித்தது, ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்தை சேர்ந்த பள்ளி பரமேஸ்வரர ராவ், 28, சுகந்திபதி சந்திரசேகர், 40, ஆடும்சுமில்லி சிவராம் பிரசாத், 43, என தெரிந்தது. விசாகபட்டினம் சென்ற போலீசார், அவர்களை கைது செய்து, நேற்று முன்தினம், துாத்துக்குடி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.