/
உள்ளூர் செய்திகள்
/
தூத்துக்குடி
/
குலசேகரன்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளத்திற்கு எதிர்ப்பு
/
குலசேகரன்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளத்திற்கு எதிர்ப்பு
குலசேகரன்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளத்திற்கு எதிர்ப்பு
குலசேகரன்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளத்திற்கு எதிர்ப்பு
ADDED : பிப் 05, 2025 02:16 AM

குலசேகரன்பட்டினம்:துாத்துக்குடி மாவட்டம், குலசேகரன்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்கும் பணிகள் நடக்கின்றன. இந்நிலையில்,தமிழக அரசின் தொழில் முதலீடு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில், விண்வெளி தொழில் பூங்கா அமைப்பதற்கு, ஆதியாக்குறிச்சி பஞ்சாயத்தில், 1000 ஏக்கர் விவசாய நிலம் கையகப்படுத்தப்படும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது.
அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அப்பகுதி மக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், விவசாய நிலங்கள் பறிக்கப்பட்டு வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்படுவதாக கூறி, கிராம மக்கள் உடன்குடியில் நேற்று உண்ணாவிரதப் போராட்டம் நடத்த போவதாக அறிவித்தனர்.
போலீசார் அனுமதி அளிக்காத நிலையில், பஜார் பாரதி திடலில் போராட்டம் நடத்த திரண்டனர். விவசாயம் மற்றும் குடியிருப்பு நிலங்களை கையப்படுத்துவதை கைவிட்டு மக்களுக்கு பாதிப்பில்லாத விவசாயத்திற்கு பயன்படாத இடத்தை தேர்வு செய்ய வேண்டும் என வலியுறுத்தினர்.
இந்நிலையில், அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்டதாக, 111 பெண்கள் உட்பட 203 பேரை குலசேகரன்பட்டினம் போலீசார் கைது செய்து டவுண் பஞ்சாயத்து மண்டபத்தில் அடைத்தனர். மாலையில் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.