/
உள்ளூர் செய்திகள்
/
தூத்துக்குடி
/
வலி நிவாரணி மாத்திரைகள் பறிமுதல்
/
வலி நிவாரணி மாத்திரைகள் பறிமுதல்
ADDED : ஜன 23, 2025 01:58 AM
துாத்துக்குடி:துாத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு போதை பொருட்கள் கடத்த இருப்பதாக கிடத்த தகவலின் படி போதைப்பொருள் கடத்தல் தடுப்பு நுண்ணறிவு பிரிவு போலீசார் நேற்று இனிகோநகர் சதுப்பு நிலப்பகுதிகளில் திடீரென சோதனை நடத்தினர்.
அங்கு தண்ணீர் புகாத வகையில் பாலித்தீன் கவர்களால் சுற்றப்பட்டிருந்த 70 மூட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். அதில் 3 டன்கள் சமையலுக்கு பயன்படுத்தும் புளி, வலி நிவாரணி மாத்திரைகள் மற்றும் பட்டாசுகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
படகுகள் மூலம் கடல் வழியாக இலங்கைக்கு கடத்த பதுக்கி வைக்கப்பட்டிருந்தது சுமார் 75 லட்சம் ரூபாய் மதிப்பிலான புளி, வலி நிவாரணி மாத்திரைகள் மற்றும் பட்டாசுகளை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த பொருட்களுக்கு இலங்கையில் அதிக பணம் கிடைப்பதால் அங்கு கடத்திச் செல்ல பதுக்கி வைக்கப்பட்டிருந்தது விசாரணையில் தெரிய வந்ததாக போலீசார் கூறினர்.