/
உள்ளூர் செய்திகள்
/
தூத்துக்குடி
/
திருச்செந்துார் கோவிலில் சோதனைக்கு பிறகே அனுமதி!
/
திருச்செந்துார் கோவிலில் சோதனைக்கு பிறகே அனுமதி!
ADDED : ஜன 25, 2025 12:30 PM

திருச்செந்தூர்: குடியரசு தின விழாவையொட்டி திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
குடியரசு தினம் நாளை நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. முக்கிய வழிபாட்டுத் தலங்கள், பொதுமக்கள் கூடும் இடங்கள், ரயில்வே நிலையங்கள் உள்ளிட்ட இடங்களில் போலீசார் பாதுகாப்பை பலப்படுத்தி உள்ளனர்.  திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலுக்கு இன்று வரும் பக்தர்கள் உடைமைகளை ஆய்வு செய்த பின்னரே தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.
திருக்கோவில் இன்ஸ்பெக்டர் கனகராஜ் தலைமையில் போலீசார் கோவில் வளாகம், பக்தர்கள் தரிசனத்திற்கு செல்லும் பாதை, கடற்கரை உள்ளிட்ட இடங்களில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். வெடிகுண்டு சோதனை நிபுணர்கள் எஸ்.எஸ்.ஐ.,க்கள் காமாட்சி சுந்தரம், குமாரசாமி, கதிரேசன், முதுநிலை காவலர் சுடலைமுத்து மற்றும் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். கோவில் வளாகத்தை சுற்றிலும் கூடுதலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

