/
உள்ளூர் செய்திகள்
/
தூத்துக்குடி
/
ஓய்வு பெற்ற நீதிபதிக்கு மிரட்டல் மத போதகர்கள் மீது போலீசில் புகார்
/
ஓய்வு பெற்ற நீதிபதிக்கு மிரட்டல் மத போதகர்கள் மீது போலீசில் புகார்
ஓய்வு பெற்ற நீதிபதிக்கு மிரட்டல் மத போதகர்கள் மீது போலீசில் புகார்
ஓய்வு பெற்ற நீதிபதிக்கு மிரட்டல் மத போதகர்கள் மீது போலீசில் புகார்
ADDED : மே 10, 2025 01:41 AM
துாத்துக்குடி:தென்னிந்திய திருச்சபையின் கீழ் செயல்படும், டயோசீசன் எனப்படும் துாத்துக்குடி- நாசரேத் திருமண்டில நிர்வாகிகளின் பதவி நீட்டிப்பு தொடர்பாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு நடந்தது.
டயோசீசன் நிர்வாகத்தை கவனிக்க ஓய்வு பெற்ற நீதிபதி ஜோதிமணியை நியமித்து, உயர் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார். அவர், கல்வி நிலையங்களை கவனிக்க தனி அலுவலர்களை நியமித்துள்ளார்.
இந்நிலையில், டயோசீசன் கட்டுப்பாட்டில் உள்ள மத போதகர்கள் சிலர் மீது புகார் வந்ததை தொடர்ந்து, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் பணி துவங்கியுள்ளது.
இந்நிலையில், துாத்துக்குடி கால்டுவெல் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் உள்ள டயோசீசன் அலுவலக வளாகத்தில், நேற்று முன்தினம் ஓய்வு பெற்ற நீதிபதி ஜோதிமணியின் காரை வழிமறித்து மத போதகர்கள் சிலர் தகராறு செய்தனர்.
அப்போது, அவரது உதவியாளர் கருணாகரன் தாக்கப்பட்டார்.
துாத்துக்குடி ஏ.எஸ்.பி., மதனிடம் கருணாகரன் அளித்துள்ள மனு:
மே 8ம் தேதி மாலை திருமண்டில அலுவலகத்தில் இருந்து, ஓய்வு பெற்ற நீதிபதி ஜோதிமணியுடன் காரில் வெளியே வந்தோம்.
எங்களுடன் ஓய்வு பெற்ற நீதிபதிகள் ஜான் சந்தோசம், ரத்தினராஜ் இருந்தனர். மத போதகர் டேவிட்ராஜ் தலைமையிலான குழுவினர் காரை வழிமறித்தனர்.
மத போதகர்கள் லிவிங்ஸ்டன், ஹாரிஸ், ராபின், கால்டுவெல் மேல்நிலைப்பள்ளி அலுவலக உதவியாளர் ஸ்டாலின், தாளமுத்துநகரை சேர்ந்த ஆபிரகாம் உட்பட 15 பேர் ஓய்வுபெற்ற நீதிபதியை தகாத வார்த்தைகளால் பேசி, கொலை மிரட்டல் விடுத்தனர்.
பிஷப் செல்லையாவின் காரையும் வெளியேறவிடாமல் வழிமறித்து தகராறு செய்தனர். தட்டிக்கேட்ட என்னை டேவிட்ராஜ் திடீரென தாக்கியதோடு, கொலை செய்து விடுவதாக மிரட்டினார். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியுள்ளார்.