/
உள்ளூர் செய்திகள்
/
தூத்துக்குடி
/
வாகன பாஸ் விற்கவில்லை காவல் துறை விளக்கம்
/
வாகன பாஸ் விற்கவில்லை காவல் துறை விளக்கம்
ADDED : அக் 30, 2025 03:09 AM
துாத்துக்குடி: --: 'திருச்செந்துார் கோவில் சூரசம்ஹார நிகழ்வில் வாகன அனுமதி பாஸ் விற்பனை செய்யப்படவில்லை' என, காவல் துறை விளக்கம் அளித்துள்ளது.
திருச்செந்துார் முருகன் கோவிலில், கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு, வாகன அனுமதி பாஸ் கள்ளச்சந்தையில் விற்பனை செய்யப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பான செய்தி, நம்நாளிதழிலும் வெளியானது.
இந்நிலையில், துாத்துக்குடி மாவட்ட காவல் துறை வெளியிட்டுள்ள அறிக்கை:
சூரசம்ஹார நிகழ்வு நாளில் மட்டும் பயன்படுத்தும் வாகன சிறப்பு அனுமதி பாஸ் யாருக்கும் வழங்கப்படவில்லை. சூரசம்ஹார விழாவிற்கு இரண்டு நாட்களுக்கு முன், 70க்கும் மேற்பட்ட தனியார் லாட்ஜ்களில் தங்க 'புக்கிங்' செய்த பயனர்களுக்கு மட்டுமே, லாட்ஜ் பாஸ் வழங்கப்பட்டது.
மேலும், கோ வில் பராமரிப்பு பணி, மின் ஊழியர்கள் பணி, பால், மருந்து போன்ற அத்தியாவசிய பொருட்களை எடுத்து செல்லும் வாகனங்களுக்கு மட்டுமே, சிறப்பு பாஸ் அல்லாமல், அனுமதி பாஸ் மட்டுமே வழங்கப்பட்டது.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

