/
உள்ளூர் செய்திகள்
/
தூத்துக்குடி
/
துாத்துக்குடி - திருச்செந்துார் சாலையில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு

ADDED : அக் 20, 2025 12:29 AM

துாத்துக்குடி: துாத்துக்குடி மாவட்டம் திருச்செந்துார் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான ஆத்துாரில் சூறாவளி காற்றுடன் மழை பெய்ததால் நேற்று அதிகாலை நரசன்விளை என்ற இடத்தில் சாலையோர மரம் திடீரென முறிந்து சாலையில் விழுந்தது.
இதனால், துாத்துக்குடி -- திருச்செந்துார் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஆத்துார் போலீசார் அப்பகுதி மக்கள் உதவியுடன் போக்குவரத்தை சீர் செய்தனர்.
ஜே.சி.பி., இயந்திரம் கொண்டு மரம் அகற்றப்பட்டது. ஒரு மணி நேரத்திற்கும் மேலாக சாலையின் இருபுறமும் போக முடியாததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதேபோல, மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் பெய்த மழையால் தாழ்வான பகுதிகளில் உள்ள குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்தது.