/
உள்ளூர் செய்திகள்
/
தூத்துக்குடி
/
திருச்செந்துார் கடல் 100 அடி உள்வாங்கியது
/
திருச்செந்துார் கடல் 100 அடி உள்வாங்கியது
ADDED : அக் 20, 2025 12:31 AM

துாத்துக்குடி: திருச்செந்துார் கோவில் கடற்கரையில், 100 அடி அளவுக்கு கடல் நீர் உள்வாங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு வரும் பக்தர்கள் கடற்கரையில் புனித நீராடுவது வழக்கம். சமீப காலமாக அமாவாசை, பவுர்ணமியை ஒட்டிய நாட்களில் கடல் சீற்றத்துடனும், உள்வாங்கியும் காணப்படுவது வழக்கமாக உள்ளது.
இன்று அமாவாசை என்பதால் நேற்று காலை முதல் கோவில் முன்புள்ள கடற்கரையில் தண்ணீர் திடீரென உள்வாங்கியது. கோவில் முன்புள்ள நாழிக்கிணறு பகுதியில் இருந்து அய்யா கோவில் வரை 500 மீட்டர் நீளத்திற்கு 100 அடி அகலத்தில் கடல் நீர் உள்வாங்கியது.
பச்சை நிற பாசி படிந்த பாறைகள் அதிக அளவில் வெளியே தெரிகின்றன. இருப்பினும், கோவிலுக்கு வந்த பக்தர்கள் அந்த பாறைகள் மீது நின்றபடி மொபைல் போனில் செல்பி மற்றும் புகைப்படங்கள் எடுத்து மகிழ்ந்தனர். போலீசாரும், கடற்கரை பாதுகாப்பு பணியாளர்களும் அவர்களை எச்சரித்து அனுப்பினர்.