/
உள்ளூர் செய்திகள்
/
தூத்துக்குடி
/
ரூ.5 கோடி சீனா பட்டாசு துாத்துக்குடியில் பறிமுதல்; நான்கு மும்பை தொழிலதிபர்கள் சுற்றிவளைப்பு
/
ரூ.5 கோடி சீனா பட்டாசு துாத்துக்குடியில் பறிமுதல்; நான்கு மும்பை தொழிலதிபர்கள் சுற்றிவளைப்பு
ரூ.5 கோடி சீனா பட்டாசு துாத்துக்குடியில் பறிமுதல்; நான்கு மும்பை தொழிலதிபர்கள் சுற்றிவளைப்பு
ரூ.5 கோடி சீனா பட்டாசு துாத்துக்குடியில் பறிமுதல்; நான்கு மும்பை தொழிலதிபர்கள் சுற்றிவளைப்பு
ADDED : அக் 20, 2025 12:55 AM

துாத்துக்குடி: சீனாவில் இருந்து கடத்தி வரப்பட்ட, 5 கோடி ரூபாய் மதிப்பிலான பட்டாசுகளை மத்திய வருவாய் குற்ற புலனாய்வு பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக, நால்வரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
சீனாவில் இருந்து தரம் குறைந்த பொருட்கள், தடை செய்யப்பட்ட பட்டாசுகள், பொம்மைகள் கப்பல் மூலம் துாத்துக்குடி துறைமுகத்திற்கு கடத்தி வரப்படுவதாக மத்திய வருவாய் குற்ற புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, சந்தேகத்தின் அடிப்படையில் சீனாவின் நிங்போ துறைமுகத்தில் இருந்து வந்த கப்பலில் இருந்த இரண்டு கன்டெய்னர் பெட்டிகளை ஆவணங்கள் அடிப்படையில் அவர்கள் சோதனையிட்டனர்.
சிகால் மல்டிமாடல் ரெயில் டிரான்ஸ்போர்ட் லிமிடெட் மற்றும் சோழா லாஜிஸ்டிக்ஸ் ஆகிய நிறுவனங்கள் மூலம் இறக்குமதி செய்யப்பட்ட இரண்டு கன்டெய்னர் பெட்டிகளில், சுவர்களில் ஏற்படும் ஓட்டைகளை அடைக்க பயன்படுத்தப்படும் சிலிகான் செலன்ட் கன்ஸ் என்ற பெயரில் சீன பட்டாசுகள் கடத்தி வரப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
ஐந்து கோடி ரூபாய் மதிப்பிலான, தடை செய்யப்பட்ட, 84,000 பாக்கெட்டுகளில் இருந்த சீனா பட்டாசுகள், 35 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 9,000 சிலிகான் செலன்ட் கன்ஸ் ஆகியவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
இதுதொடர்பாக, நவி மும்பையை சேர்ந்த தொழிலதிபர்கள் விகாஸ் பட்டீஸ்வர் துபே, 51, தஸ்ரத் மச்சிந்திரா கோகரே, 49, துாத்துக்குடியை சேர்ந்த மைக்கேல் ஜேக்கப் ஜெயசேகரன், 43, சூசை மாணிக்கம் ஜெயேந்திரன், 50, ஆகிய நால்வரையும் அதிகாரிகள் கைது செய்தனர்.
விசாரணைக்கு பின் அவர்கள் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்த சம்பவத்தில் மும்பையை சேர்ந்த மேலும் ஒரு தொழிலதிபருக்கு தொடர்பு இருப்பதாக மத்திய வருவாய் குற்ற புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது. வேறு யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என, அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.