/
உள்ளூர் செய்திகள்
/
தூத்துக்குடி
/
பேரணியில் பங்கேற்ற மனைவிக்கு வெட்டு கணவருக்கு போலீஸ் வலை
/
பேரணியில் பங்கேற்ற மனைவிக்கு வெட்டு கணவருக்கு போலீஸ் வலை
பேரணியில் பங்கேற்ற மனைவிக்கு வெட்டு கணவருக்கு போலீஸ் வலை
பேரணியில் பங்கேற்ற மனைவிக்கு வெட்டு கணவருக்கு போலீஸ் வலை
ADDED : ஜன 31, 2024 02:04 AM
தூத்துக்குடி:தூத்துக்குடி அல்லிக்குளம் பகுதியைச் சேர்ந்தவர் குணா 35. அவரது மனைவி அமராவதி 28. இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
குணா வேலைக்கு செல்லவில்லை. அமராவதி மகளிர் சுய உதவி குழுவில் இணைந்து பணியாற்றி வருகிறார். இதனால் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
நேற்று தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் நடந்த பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு பேரணியில் பங்கேற்று விட்டு டூவீலரில் அமராவதி வீட்டுக்கு சென்று கொண்டு இருந்தார்.
கோரம்பள்ளம் அருகே அவரை வழிமறித்து கணவர் சரமாரியாக அரிவாளால் வெட்டினார். கழுத்து பகுதியில் பலத்த வெட்டினால் உயிருக்கு போராடிய நிலையில் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அமராவதி அனுமதிக்கப்பட்டார். குணாவை போலீசார் தேடி வருகின்றனர்.