வெடிகுண்டு வெடித்து 'ரீல்ஸ்' ரவுடிகளுக்கு போலீஸ் 'காப்பு'
வெடிகுண்டு வெடித்து 'ரீல்ஸ்' ரவுடிகளுக்கு போலீஸ் 'காப்பு'
ADDED : ஆக 24, 2026 04:36 AM
அ நிறம் | அளவு
துாத்துக்குடி: வெடிகுண்டு வெடித்து, 'ரீல்ஸ்' வெளியிட்ட ரவுடி அலெக்ஸ், 25, என்பவர் உட்பட, மூவரை போலீசார் கைது செய்தனர்.
துாத்துக்குடி மாவட்டம், லெவிஞ்சிபுரத்தை சேர்ந்தவர் அலெக்ஸ். ரவுடியான இவர், சில நாட்களுக்கு முன், காட்டுப்பகுதியில் நாட்டு வெடிகுண்டு ஒன்றை தயாரித்து, வெடிக்க செய்தார். அதை வீடியோ எடுத்து, ரீல்ஸ் தயார் செய்து, சமூக வலைதளங்களில் பதிவிட்டு, 'வாட்ஸாப்'பிலும் பரப்பி உள்ளார்.
தென்பாகம் போலீசார், அலெக்ஸ், அவரது நண்பர்களான அமுதாநகரை சேர்ந்த பிரகாஷ், 23, சுடலைகாலனியை சேர்ந்த குரு, 21, ஆகியோரை கைது செய்து, சிறையில் அடைத்தனர். விசாரணையில், அலெக்ஸ் பிறந்தநாளை முன்னிட்டு, நண்பர்கள் வெடிகுண்டு தயாரித்து, வெடிக்க செய்தது தெரிந்தது.
