/
உள்ளூர் செய்திகள்
/
தூத்துக்குடி
/
ஹோட்டல் உணவில் பூரான் : கர்ப்பிணிக்கு வாந்தி, மயக்கம்
/
ஹோட்டல் உணவில் பூரான் : கர்ப்பிணிக்கு வாந்தி, மயக்கம்
ஹோட்டல் உணவில் பூரான் : கர்ப்பிணிக்கு வாந்தி, மயக்கம்
ஹோட்டல் உணவில் பூரான் : கர்ப்பிணிக்கு வாந்தி, மயக்கம்
ADDED : ஆக 26, 2025 12:20 AM

துாத்துக்குடி: ஹோட்டலில் வாங்கிய பார்சல் உணவில் பூரான் கிடந்த நிலையில், அதை சாப்பிட்ட கர்ப்பிணிக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது.
துாத்துக்குடி, தஸ்நேவிஸ் நகரை சேர்ந்த ஒரு குடும்பத்தினர், பாலவிநாயகர் கோவில் தெருவில் உள்ள பிருந்தாவன் ஹோட்டலில் நேற்று முன்தினம் மதியம் சாப்பாடு பார்சல் வாங்கினர். அதை சாப்பிட்ட கர்ப்பிணி பெண் ஒருவருக்கு திடீரென வாந்தி, மயக்கம் ஏற்பட்டது.
அந்த பெண் சாப்பிட்ட உணவில் இறந்த நிலையில் பூரான் கிடந்தது தெரியவந்தது. உடனடியாக அவர் துாத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்து மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு புகார் தெரிவிக்கப் பட்டது.
அவர்கள் ஹோட்டலில் சோதனை செய்தனர். சமையல் அறையில் விதிமுறைகள் கடைபிடிக்கப்படுகிறதா என, ஆய்வு செய்தனர். உணவு மாதிரிகளை சோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் அருண் கூறுகையில், ''வாழை இலை கட்டில் இருந்து பூரான் வந்திருக்க வாய்ப்புள்ளதாக தெரிவித்தனர். அதை கவனித்து சமையலறையை சுத்தமாக வைத்திருக்க வேண்டியது அவர்கள் பொறுப்பு. நோட்டீஸ் வழங்கி உள்ளோம். சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என, எச்சரித்துள்ளோம்,'' என்றார்.