/
உள்ளூர் செய்திகள்
/
தூத்துக்குடி
/
பணம் கொடுத்தால் மட்டுமே சான்று வி.ஏ.ஓ., அலுவலகத்தில் போஸ்டர்
/
பணம் கொடுத்தால் மட்டுமே சான்று வி.ஏ.ஓ., அலுவலகத்தில் போஸ்டர்
பணம் கொடுத்தால் மட்டுமே சான்று வி.ஏ.ஓ., அலுவலகத்தில் போஸ்டர்
பணம் கொடுத்தால் மட்டுமே சான்று வி.ஏ.ஓ., அலுவலகத்தில் போஸ்டர்
ADDED : அக் 25, 2024 02:22 AM

துாத்துக்குடி:துாத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் யூனியனுக்கு உட்பட்ட கொம்பன்குளத்தில், பஞ்சாயத்து அலுவலகம், ரேஷன் கடை, வி.ஏ.ஓ., அலுவலகம் ஆகியவை ஒரே வளாகத்தில் செயல்படுகின்றன. வி.ஏ.ஓ.,வாக பிரபாகனி என்பவர் பணிபுரிகிறார்.
இந்நிலையில், 'கொம்பன்குளம் கிராம நிர்வாக அலுவலக விலைப்பட்டியல்' என்ற பெயரில், வி.ஏ.ஓ., அலுவலக வளாக சுவரில், ஒரு போஸ்டர் ஒட்டப்பட்டிருந்தது.
அதில், ஜாதி சான்றிதழ், வருமான சான்றிதழ், இருப்பிட சான்றிதழ் பெற, 200 ரூபாய் என, குறிப்பிடப்பட்டிருந்தது.
மேலும், பட்டா, சிட்டா பெறுவதற்கு, காலிமனை விபரம், நத்தம் விபரம் என சான்றிதழ் வாங்குவதற்கு, குறிப்பிட்ட தொகை நிர்ணயம் செய்து, வி.ஏ.ஓ., பிரபாகனியின் தொடர்பு எண்ணை தெரிவித்து, 'ஜி-பே மூலம் பணம் செலுத்தலாம்; கடன் கிடையாது' என, போஸ்டரில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
தகவல் அறிந்த வருவாய்த் துறையினர், அந்த போஸ்டரை அப்புறப்படுத்தினர்.
இதுகுறித்து சாத்தான்குளம் காவல் நிலையத்தில், பிரபாகனி புகார் அளித்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.

