ADDED : ஏப் 04, 2025 02:38 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
துாத்துக்குடி:துாத்துக்குடி அனல் மின்நிலையத்தில், மார்ச் 15ல், 1வது யூனிட் பாய்லரை குளிர்விக்கும் குளிர்சாதன பகுதிக்கு செல்லும் கேபிள் ஒயரில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இதனால் 1,2,3 ஆகிய யூனிட்களில் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டது.
தீ விபத்து பாதிப்புகளை ஆய்வு செய்த இன்ஜினியர்கள் குழு சீரமைப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், 3வது யூனிட்டில் ஏற்பட்ட பழுது சரி செய்யப்பட்டு, 17 நாட்களுக்கு பின் நேற்று அதிகாலை முதல் மீண்டும் அந்த யூனிட்டில் மின் உற்பத்தி துவங்கியது.

