/
உள்ளூர் செய்திகள்
/
தூத்துக்குடி
/
கொலை வழக்கில் பாதிரியார் திருச்செந்தூர் கோர்ட்டில் சரண்
/
கொலை வழக்கில் பாதிரியார் திருச்செந்தூர் கோர்ட்டில் சரண்
கொலை வழக்கில் பாதிரியார் திருச்செந்தூர் கோர்ட்டில் சரண்
கொலை வழக்கில் பாதிரியார் திருச்செந்தூர் கோர்ட்டில் சரண்
ADDED : ஜன 25, 2024 01:28 AM
துாத்துக்குடி:கன்னியாகுமரி மாவட்டம் திங்கள்சந்தை அருகே மயிலோடு மடத்துவிளையை சேர்ந்தவர் சேவியர்குமார், 42. அரசு போக்குவரத்து பணிமனையில் மெக்கானிக்காக பணியாற்றி வந்தார். நாம் தமிழர் என்ற கட்சியின் தக்கலை ஒன்றிய தலைவராக இருந்தார்.
இவரது மனைவி ஜெமினி, மயிலோடு சர்ச் நிர்வாகத்துக்கு உட்பட்ட பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார். சேவியர்குமாருக்கும், சர்ச் நிர்வாகிகளுக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டில், ஜெமினி பணியில் இருந்து நீக்கப்பட்டார்.
இது தொடர்பாக பேச்சுக்கு சென்ற சேவியர் குமார், சர்ச் வளாகத்தில் பாதிரியார் ராபின்சன் இல்லத்தில் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக 15 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. பாதிரியார் ராபின்சன் தலைமறைவாக இருந்தார்.
அவர் நேற்று, துாத்துக்குடி மாவட்டம் திருச்செந்துார் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் சரணடைந்தார். அவரை திருநெல்வேலி மத்திய சிறைக்கு அனுப்பவும், ஜன., 29ல் கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவும் மாஜிஸ்திரேட் வரதராஜன் உத்தரவிட்டார்.
ராபின்சனை திருநெல்வேலி மத்திய சிறைக்கு அழைத்துச் செல்லும்போது நீதிமன்றத்தின் முன் வாசல் வழியாக கொண்டு செல்லாமல் நீதிபதிகள் செல்லும் பின்வாசல் வழியாக போலீசார் அவரை பாதுகாப்பாக அழைத்துச் சென்றனர்.
அவருக்கு பாதுகாப்பு அளிக்கும் போலீசாரை கண்டித்து நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.