ADDED : மார் 05, 2026 09:51 PM
அ நிறம் | அளவு
துாத்துக்குடி : கோவில்பட்டி கிளை சிறையில் இருந்து கைதி ஒருவர், நேற்று இரவு தப்பினார்.
துாத்துக்குடி மாவட்டம், மாப்பிள்ளையூரணியை சேர்ந்த நிரஞ்சன், 18, என்பவர், விளாத்திகுளத்தில் நடந்த ஒரு அடிதடி வழக்கில், சமீபத்தில் கைது செய்யப்பட்டார். போலீசார் அவரை, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், பிப்., 12ல் கோவில்பட்டியில் உள்ள கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.நேற்று இரவு, நிரஞ்சன் திடீரென சிறையில் இருந்து தப்பியோடிவிட்டார். சிறை அலுவலர் புகாரில், நிரஞ்சனை போலீசார் தேடுகின்றனர்.
