/
உள்ளூர் செய்திகள்
/
தூத்துக்குடி
/
மாணவிகளிடம் அத்துமீறல் பிரச்னை; பள்ளி செயலர், முதல்வர் கைது
/
மாணவிகளிடம் அத்துமீறல் பிரச்னை; பள்ளி செயலர், முதல்வர் கைது
மாணவிகளிடம் அத்துமீறல் பிரச்னை; பள்ளி செயலர், முதல்வர் கைது
மாணவிகளிடம் அத்துமீறல் பிரச்னை; பள்ளி செயலர், முதல்வர் கைது
ADDED : நவ 12, 2024 11:41 PM

தூத்துக்குடி ; துாத்துக்குடி மாவட்டம் உடன்குடி சல்மா மெட்ரிக் பள்ளி மாணவியர்களை விளையாட்டு போட்டிக்கு அழைத்துச் சென்று மது வாங்கி கொடுத்து உடற்கல்வி ஆசிரியர் பொன்சிங் தவறாக நடக்க முயன்ற விவகாரத்தில் உடனடி நடவடிக்கை எடுக்காததற்காக பள்ளி செயலர் செய்யது அகமது, முதல்வர் சார்லஸ் ஸ்வீட்லி கைது செய்யப்பட்டனர்.
உடன்குடி சல்மா மெட்ரிகுலேசன் பள்ளியில் 500 மாணவ, மாணவிகள் பயில்கின்றனர். அக்., 22ல் தூத்துக்குடியில் நடந்த விளையாட்டுப்போட்டிகளில் பங்கேற்க சல்மா பள்ளி மாணவிகள் 5 பேரை உடற்கல்வி ஆசிரியர் பொன்சிங் அழைத்து சென்றிருந்தார்.
மறுநாளும் விளையாட்டு போட்டி இருந்ததால் இரவு அறையில் தங்கியிருந்த மாணவிகளுக்கு மது வாங்கி கொடுத்து பாலியல் ரீதியாகவும் பொன் சிங் அத்துமீறி நடக்க முயற்சித்துள்ளார்.
இதுகுறித்து தாமதமாக அறிந்த பெற்றோர் அளித்த புகாரின்பேரில் திருச்செந்தூர் அனைத்து மகளிர் போலீசார் உடற்கல்வி ஆசிரியர் பொன் சிங்கை கோவையில் கைது செய்தனர். இதற்கிடையில் இவ்விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க கோரி பெற்றோர் நேற்று முன்தினம் சல்மா மெட்ரிக் பள்ளியை முற்றுகையிட்டனர்.
அவர்களை போலீசார் தடியடி நடத்தி கலைந்து செல்ல வைத்தனர்.
இச்சம்பவத்தில் ஏற்கனவே தகவல் தெரிந்தும் நடவடிக்கை எடுக்காமல் மறைத்த பள்ளி செயலர் செய்யது அகமது, முதல்வர் சார்லஸ் ஸ்வீட்லி ஆகியோரை போலீசார் போக்சோ சட்டப்பிரிவில் நேற்று கைது செய்தனர்.
செய்யது அகமதுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதால் அவரை மருத்துவமனைக்கு போலீசார் அழைத்து சென்றனர்.