தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தூத்துக்குடி/ மாணவி உடலை பெற மறுத்து நான்காவது நாளாக போராட்டம்

 மாணவி உடலை பெற மறுத்து நான்காவது நாளாக போராட்டம்

 மாணவி உடலை பெற மறுத்து நான்காவது நாளாக போராட்டம்


ADDED : மார் 15, 2026 06:22 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 15, 2026 06:22 AM


Follow on Google
அ நிறம் | அளவு

துாத்துக்குடி: பிளஸ் 2 மாணவி கொலை வழக்கு தொடர்பாக, காவல் துறை அதிகாரிகளுடன் சட்டம் - ஒழுங்கு பிரிவு ஏ.டி.ஜி.பி., மகேஸ்வர் தயாள் நேற்று ஆலோசனை நடத்தினார்.

துாத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகே வேடநத்தம் கிராமத்தில், மார்ச் 10ல் பிளஸ் 2 மாணவி கொடூரமாக கொலை செய்யப்பட்டார்.

அவர், பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக, உறவினர்கள் குற்றம் சாட்டினர். கொலையாளிகளை விரைந்து பிடிக்க வலியுறுத்தி, உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் நான்காவது நாளாக நேற்றும் உடலை வாங்க மறுத்தனர்.

இந்நிலையி ல், மாணவி கொலை வழக்கு தொடர்பாக நடத்தப்பட்டு வரும் விசாரணை குறித்து, தமிழக சட்டம், ஒழுங்கு ஏ.டி.ஜி.பி., மகேஸ்வர் தயாள், காவல் துறை அதிகாரிகளுடன் நேற்று ஆலோசனை நடத்தினார்.

துாத்துக்குடி மாவட்ட காவல் துறை அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில், தென் மண்டல ஐ.ஜி., விஜயேந்திர பிதரி, டி.ஐ.ஜி., சரவணன், மாவட்ட எஸ்.பி., மதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

மாணவி கொலை தொடர் பாக பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடந்த நிலையில், 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டு குற்றவாளிகளை தேடும் பணி நடந்து வருகிறது. குற்றவாளிகளை விரைவில் பிடித்து விடுவதாக கலெக்டர் இளம்பகவத் தெரிவித்ததை தொடர்ந்து, மக்கள் போராட்டத்தை கைவிட்டிருந்தனர்.

இதுவரை குற்றவாளிகள் பிடிபடாததால், நான்காவது நாளாக மாணவி யின் உடலை வாங்க மறுத்து, உறவினர்கள் மற்றும் வேடநத்தம் கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us