ADDED : மே 23, 2025 02:58 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
துாத்துக்குடி:குடும்ப தகராறில் வாலிபரை வெட்டி கொலை செய்த அவரது உறவினரை போலீசார் கைது செய்தனர்.
துாத்துக்குடி மாவட்டம், திருச்செந்துார் அருகே வீரபாண்டியபட்டணத்தை சேர்ந்தவர் ஜெகதீஷ், 32. இவருக்கும், அவரது உறவினர் ஜவஹர், 32, என்பவருக்கும் குடும்ப தகராறு இருந்து வந்தது.
நேற்று முன்தினம் இரவு, ஜெகதீஷ், தன் நண்பர் ஒருவருடன் சேர்ந்து, ஜவஹர் வீட்டிற்கு சென்று தகராறு செய்துள்ளார்.
ஆத்திரமடைந்த ஜவஹர், அரிவாளால் ஜெகதீஷை வெட்டி விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். காயமடைந்த ஜெகதீஷ் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற வழியில் உயிரிழந்தார்.
திருச்செந்துார் போலீசார், உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
கொலை குறித்து வழக்கு பதிவு செய்து, தலைமறைவாக இருந்த ஜவஹரை போலீசார் நேற்று கைது செய்தனர்.