/
உள்ளூர் செய்திகள்
/
தூத்துக்குடி
/
சார் பதிவாளர் அலுவலகத்தில் ரூ.1.60 லட்சம் பறிமுதல்
/
சார் பதிவாளர் அலுவலகத்தில் ரூ.1.60 லட்சம் பறிமுதல்
சார் பதிவாளர் அலுவலகத்தில் ரூ.1.60 லட்சம் பறிமுதல்
சார் பதிவாளர் அலுவலகத்தில் ரூ.1.60 லட்சம் பறிமுதல்
ADDED : நவ 29, 2024 02:45 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தூத்துக்குடி:தூத்துக்குடி கீழூர் பத்திரப்பதிவு சார் பதிவாளர் அலுவலக வளாகத்தில் நேற்று மாலை மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீஸ் டி.எஸ்.பி., பீட்டர் பால் தலைமையில் போலீசார் திடீர் சோதனை மேற்கொண்டனர்.
அங்குள்ள சார் பதிவாளர் நேற்று விடுப்பில் சென்றிருந்தார். சார் பதிவாளர் பொறுப்பு வகித்த உதவியாளர் ஆரோக்கியராஜிடம் போலீசார் சோதனை நடத்தினர். அவரது அறையிலிருந்து ரூ.1.60 லட்சம் கணக்கில் வராத பணத்தை பறிமுதல் செய்தனர். அதே வளாகத்தில் உள்ள மற்ற சார் பதிவாளர் அலுவலகங்களிலும் சோதனை நடந்தது. பணம் எப்படி வந்தது என போலீசார் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.