/
உள்ளூர் செய்திகள்
/
தூத்துக்குடி
/
அனுமதியின்றி மண் அள்ளிய செங்கல் நிறுவனங்களுக்கு ரூ 2.41 கோடி அபராதம்
/
அனுமதியின்றி மண் அள்ளிய செங்கல் நிறுவனங்களுக்கு ரூ 2.41 கோடி அபராதம்
அனுமதியின்றி மண் அள்ளிய செங்கல் நிறுவனங்களுக்கு ரூ 2.41 கோடி அபராதம்
அனுமதியின்றி மண் அள்ளிய செங்கல் நிறுவனங்களுக்கு ரூ 2.41 கோடி அபராதம்
ADDED : மார் 09, 2024 01:17 AM
துாத்துக்குடி:ஸ்ரீவைகுண்டம் அருகே தாமிரபரணியை ஒட்டியுள்ள பகுதிகளில் அனுமதி இன்றி கனிம வளம் மண் அள்ளிய 11 செங்கல் சூளைகளுக்கு 2 கோடியே 41 லட்சம் அபராதம் விதித்து கலெக்டர் உத்தரவிட்டார்.
துாத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் வட்டத்தில் தாமிரபரணி கரையில் பல்வேறு செங்கல் சூளைகள் உள்ளன. தாமிரபரணி கரையில் மண் அள்ளி செங்கல் தயாரிக்க பயன்படுத்துகின்றனர்.
இதனால் அண்மையில் வெள்ளம் வந்தபோது செங்கல் சூளைகளுக்காக மண் அள்ளப்பட்ட பகுதியில் வழியாக வெள்ளநீர் பல்வேறு கிராமங்களுக்குள் புகுந்தது. எனவே அனுமதியின்றி நடத்தப்படும் செங்கல் சூளைகளுக்கு தடை விதிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
கனிமவளத் துறையினர் ஆய்வு மேற்கொண்டதில் ஸ்ரீவைகுண்டம் ஆழ்வார் தோப்பு தனியார் சேம்பர் செங்கல் உரிமையாளர் ரவி நாராயணன் என்பவர் ஸ்ரீபராங்குசநல்லூரில் பட்டா நிலத்தில் அரசு அனுமதி இன்றி குவித்து வைத்துள்ள மண் கனிம வளத்திற்காக அபராதம் ஒரு கோடியே 65 லட்சத்து 68 ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
இதேபோல திருக்களூர் பாஸ்கரன், ஏரல் சபாபதி, ஆழ்வார்தோப்பு லிங்க முனீஸ்வரன், மாவடி பண்ணை சீனிவாசன், ஆழ்வார்தோப்பு பால மகேஷ், லிங்கேஸ்வரன், ரத்தினசாமி, ரம்யா ஆகிய 11 நபர்களுக்கு மொத்தம் 2 கோடியே 41 லட்சத்து 95 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து கலெக்டர் லட்சுமிபதி உத்திரவிட்டார்.
அபராதத்தை உடனடியாக செலுத்தாத பட்சத்தில் அசையும், அசையா சொத்துக்கள் ஜப்தி செய்யப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

