/
உள்ளூர் செய்திகள்
/
தூத்துக்குடி
/
ரூ.30 லட்சம் பீடி இலை பறிமுதல்
/
ரூ.30 லட்சம் பீடி இலை பறிமுதல்
ADDED : ஜன 15, 2025 11:37 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
துாத்துக்குடி : துாத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.30 லட்சம் மதிப்புள்ள பீடி இலைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
துாத்துக்குடி இனிகோ நகர் கடற்கரையில் இன்ஸ்பெக்டர் விஜயஅனிதா தலைமையில் கியூ பிராஞ்ச் போலீசார் சோதனை மேற்கொண்டனர். இலங்கைக்கு கடத்துவதற்காக சரக்கு வாகனத்தில் கொண்டு வரப்பட்ட 40 மூட்டைகளில் இருந்த ரூ.30 லட்சம் மதிப்பிலான ஆயிரத்து 200 கிலோ பீடி இலைகளை பறிமுதல் செய்தனர். கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட சரக்கு வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டது. தப்பி ஓடிய கடத்தல் காரர்களை தேடி வருகின்றனர்.