ADDED : ஏப் 20, 2026 02:04 AM

அ நிறம் | அளவு
துாத்துக்குடி: துாத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி சட்டசபை தொகுதியில், அ.தி.மு.க.,வை சேர்ந்த முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு, தி.மு.க.,வை சேர்ந்த நகராட்சி தலைவர் கருணாநிதி இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.
தொகுதிக்குள் பணம் பட்டுவாடா செய்யப்படுவதை தடுக்க பறக்கும்படை குழுவினர், போலீசார் தீவிர கண்காணிப்பில் உள்ளனர்.
கோவில்பட்டி, லாயல் மில் காலனியில், பைக்கில் சென்ற வாலிபர் ஒருவரை போலீசார் விசாரித்தனர்.
அதில் அவர், மத்திய ஒன்றிய தி.மு.க., இளைஞரணி நிர்வாகி, உத்திரக்குமார், 35, என்பது தெரிந்தது.
அவர் பைக்கில் வைத்திருந்த சாக்கு மூட்டையை, போலீசார் பிரித்து பார்த்தனர். அதில், 35 லட்சத்து 72,000 ரூபாய் இருந்தது. அந்த பணத்தை பறிமுதல் செய்த போலீசார், தேர்தல் பறக்கும் படை குழுவினரிடம் ஒப்படைத்தனர்.
