/
உள்ளூர் செய்திகள்
/
தூத்துக்குடி
/
பள்ளி மாணவர்களுக்கு தொந்தரவு; ஆசிரியர், தலைமையாசிரியர் மீது வழக்கு
/
பள்ளி மாணவர்களுக்கு தொந்தரவு; ஆசிரியர், தலைமையாசிரியர் மீது வழக்கு
பள்ளி மாணவர்களுக்கு தொந்தரவு; ஆசிரியர், தலைமையாசிரியர் மீது வழக்கு
பள்ளி மாணவர்களுக்கு தொந்தரவு; ஆசிரியர், தலைமையாசிரியர் மீது வழக்கு
ADDED : ஜன 15, 2025 12:40 AM
துாத்துக்குடி; துாத்துக்குடியில் டியூசன் படிக்க வந்த மாணவர்களுக்கு பாலியல் தொந்தரவு தந்ததாக ஆசிரியர், புகார் அளித்தும் நடவடிக்கை நடவடிக்கை எடுக்காத தலைமையாசிரியர் மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டது.
துாத்துக்குடி ரத்தினபுரத்தில் உள்ள அரசு உதவி பெறும் ரோமன் கத்தோலிக்க உயர்நிலைப் பள்ளி தற்காலிக கணித ஆசிரியர் ஆரோக்கியராஜ் 51. இவர் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு தனது வீட்டில் வைத்து டியூஷன் வகுப்பு நடத்தி வந்தார்.
இதில் 4 மாணவர்களுக்கு பாலியல் தொந்தரவு தந்தார். இதுகுறித்து மாணவர்கள் பெற்றோரிடம் புகார் தெரிவித்தனர்.
பெற்றோர், ஆர்.சி. உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் அமல்ராஜிடம் 59 , ஆசிரியர் ஆரோக்கியராஜ் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர். ஆனால் அவர் கண்டு கொள்ளவில்லை.
எனவே துாத்துக்குடி அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர். இதையடுத்து ஆசிரியர் ஆரோக்கியராஜ், தலைமையாசிரியர் அமல்ராஜ் ஆகியோர் மீது போக்சோ பிரிவில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.