ADDED : செப் 03, 2026 12:20 AM
அ நிறம் | அளவு
துாத்துக்குடி: தனியார் நிறுவன இன்ஜினியர் முத்துகணேசன், 29, என்பவரை அரிவாளால் வெட்டி தப்பியவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
துாத்துக்குடி மாவட்டம், எட்டையபுரத்தை சேர்ந்தவர் முத்துகணேசன். தனியார் சோலார் நிறுவன இன்ஜினியர். இவரது மனைவி மகேஸ்வரி. நேற்று மதியம் இருவரும் வீட்டில் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர்.
அப்போது, முகமூடி அணிந்த நால்வர், திடீரென வீட்டிற்குள் நுழைந்து, முத்துகணேசனை அரிவாளால் வெட்டி தப்பினர். மீட்கப்பட்ட முத்துகணேசன், துாத்துக்குடி அர சு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார். எட்டையபுரம் போலீசார் வழக்கு பதிந்து, விசாரித்து வருகின்றனர்.
