ADDED : செப் 04, 2026 03:33 AM
அ நிறம் | அளவு
துாத்துக்குடி: மாணவருக்கு பாலியல் தொல்லை கொடுத்த, சக மாணவர்கள், ஒன்பது பேர் போக்சோவில் கைது செய்யப்பட்டனர்.
துாத்துக்குடி மாவட்டத்தில் உள்ள, ஒரு அரசு மேல்நிலை பள்ளியில், எட்டாம் வகுப்பு மாணவருக்கு, அதே வகுப்பில் படிக்கும் சக மாணவர்கள், சில மாதங்களாக பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்துள்ளனர். மாணவரின் புகாரில், விளாத்திகுளம் போலீசார், போக்சோவில், வழக்கு பதிந்து, ஒன்பது மாணவர்களை கைது செய்து, திருநெல்வேலி சிறுவர் கூர்நோக்கு இல்லத்தில் அடைத்தனர்.
