/
உள்ளூர் செய்திகள்
/
தூத்துக்குடி
/
துாய்மை பணியாளர் பெயரில் சுய உதவிக்குழு தலைவி மோசடி
/
துாய்மை பணியாளர் பெயரில் சுய உதவிக்குழு தலைவி மோசடி
துாய்மை பணியாளர் பெயரில் சுய உதவிக்குழு தலைவி மோசடி
துாய்மை பணியாளர் பெயரில் சுய உதவிக்குழு தலைவி மோசடி
ADDED : அக் 22, 2024 11:23 PM

துாத்துக்குடி:துாத்துக்குடி மாவட்டம், ஆறுமுகநேரி பி.எஸ். ராஜா நகர் பகுதியைச் சேர்ந்த கணேசன் மனைவி உத்திரசெல்வி, 43, மகளிர் சுய உதவிக்குழு தலைவி. உள்ளாட்சி அமைப்புகளில் துாய்மை பணியாளர்களாக பணியாற்றும் பெண்களிடம், கடன் வாங்கித் தருவதாகக் கூறி, அவர்களது ஆதார் கார்டு, போட்டோ உட்பட பல்வேறு ஆவணங்களை பெற்று, பல வங்கிகளில் புதிதாக கணக்கு துவக்கியுள்ளார். வங்கி கணக்கு துவக்கியதும் பாஸ் புத்தகம், ஏ.டி.எம்., கார்டுகளை அவரே வைத்துக் கொண்டார்.
மேலும், போலியாக மகளிர் சுய உதவிக் குழுக்களை துவக்கி, அந்த பெயரில் பல்வேறு தனியார் நிதி நிறுவனங்களில் பணம் பெற்றார். அப்பணத்தை சம்பந்தப்பட்ட பெண்களுக்கு வழங்காமல், அவரே வைத்துக் கொண்டதாக தெரிகிறது. இந்நிலையில், திடீரென அவர் தலைமறைவாகி விட்டதால், பாதிக்கப்பட்ட பெண்கள் துாத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்க நேற்று குவிந்தனர்.

