/
உள்ளூர் செய்திகள்
/
தூத்துக்குடி
/
டன் கணக்கில் சிப்பி விற்பனை; கலெக்டரிடம் ஆர்வலர் புகார்
/
டன் கணக்கில் சிப்பி விற்பனை; கலெக்டரிடம் ஆர்வலர் புகார்
டன் கணக்கில் சிப்பி விற்பனை; கலெக்டரிடம் ஆர்வலர் புகார்
டன் கணக்கில் சிப்பி விற்பனை; கலெக்டரிடம் ஆர்வலர் புகார்
ADDED : நவ 04, 2024 11:06 PM

குலசேகரன்பட்டினம் ; துாத்துக்குடி மாவட்டம், குலசேகரன்பட்டினம் பகுதியில் அரசு அனுமதியின்றி சிலர் படகுகளில் சென்று, கடல் அடிப்பகுதியில் இருந்து சிப்பிகளை எடுத்து விற்பனை செய்வதாக புகார் எழுந்துள்ளது.
சமூக ஆர்வலர் வீரபாண்டி மகேஷ், கலெக்டரிடம் இது தொடர்பாக நேற்று அளித்த மனு:
குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலுக்கு பின்புறம், கடல் பகுதியில் இருந்து சிலர் அரசு அனுமதி இல்லாமல் கிளிஞ்சல்கள் மற்றும் சிப்பிகளை டன் கணக்கில் சேகரித்து வைத்துள்ளனர். மோட்டார் பொருத்திய படகுகளில் சென்று, அவர்கள் அவற்றை வெட்டி எடுத்து வருகின்றனர்.
இதனால், கடல்வளம், மீன்வளம் மற்றும் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு உள்ளது. இந்நிலை தொடர்ந்தால், மன்னார் வளைகுடா பகுதியில் மீன்வளம் நசிந்துவிடும். சுற்றுப்புற சூழலுக்கு பெரும் அச்சுறுத்தல் ஏற்படும். இதுகுறித்து உரிய விசாரணை நடத்தி, சமூக விரோத செயலில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியுள்ளார்.

